உலகம் முழுவதும் பரவிய 'கொரோனா வைரஸ்' இந்தியாவிலும் பரவியது. டெல்லி, தெலுங்கானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவருக்கு 'கொரோனா' பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ள நிலையில், இது குறித்து 'அச்சம் வேண்டாம்' என பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவுறுத்தினார். மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்தும் அவர் விளக்கம் அளித்தார்.இந்நிலையில், வரவிருக்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சியில் பங்கேற்பதில்லை என மோடி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார்.
இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, பாரம்பரிய ஹோலி பண்டிகை கொண்டாட்டங்கள், ராஷ்டிரபதி பவனில் நடத்தப்படாது' என பதிவிடப்பட்டுள்ளது. மேலும் விழிப்புணர்வு, பாதுகாப்புடன் நாம் ஒன்றினைந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவலாம் என பதிவிடப்பட்டுள்ளது